Image Courtesy : BCCI 
கிரிக்கெட்

பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் : ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் மற்றும் தீப்தி சர்மா கேப்டன்களாக அறிவிப்பு..!!

கடந்த முறை ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான டிரைல்பிளேசர்ஸ் அணி கோப்பையை வென்று இருந்தது.

தினத்தந்தி

மும்பை,

இந்தியாவில் ஆண்களுக்காக இந்தியன் பிரீமியர் லீக் நடத்தப்படுவது போல பெண்களுக்காக "பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச்" போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் மே 23ம் தேதி முதல் மே 28 ஆம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த முறை போல இந்த தொடருக்காக சூப்பர் நோவாஸ், டிரைல்பிளேசர்ஸ் மற்றும் வெலாசிட்டி என 3 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சூப்பர்நோவாஸ் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர், டிரைல்பிளேசர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்மிரிதி மந்தனா தொடர்கின்றனர். மிதாலி ராஜ்க்கு பதிலாக வெலாசிட்டி அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த முறை ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான டிரைல்பிளேசர்ஸ் அணி கோப்பையை வென்று இருந்தது.

வெலாசிட்டி அணி:

தீப்தி ஷர்மா (கேப்டன்), ஸ்னே ராணா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, அயபோங்கா காக்கா, கேபி நவ்கிரே, கேத்ரின் கிராஸ், கீர்த்தி ஜேம்ஸ், லாரா வால்வார்ட், மாயா சோனாவனே, நத்தகன் சந்தம், ராதா யாதவ், ஆர்த்தி கேதார், ஷிவாலி பஹாத்யா, யஸ்திகா ஷிண்டே பிரணவி சந்திரா

சூப்பர்நோவாஸ் அணி:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), டானியா பாட்டியா(துணை கேப்டன்), அலனா கிங், ஆயுஷி சோனி, சந்து, டியான்ட்ரா டாட்டின், ஹர்லீன் தியோல், மேக்னா சிங், மோனிகா படேல், முஸ்கன் மாலிக், பூஜா வஸ்த்ரகர், பிரியா புனியா, ராஷி கனோஜியா, சோஃபி எக்லெஸ்டோன், சுனே லூஸ், மான்சி ஜோஷி.

டிரைல்பிளேசர்ஸ்:

ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), பூனம் யாதவ் (துணை கேப்டன்), அருந்ததி ரெட்டி, ஹெய்லி மேத்யூஸ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரியங்கா பிரியதர்ஷினி, ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா சிங், ரிச்சா கோஷ், எஸ் மேகனா, சைகா இஷாக், சல்மா கதுன், சுப்ரியா மால், ஷர்மின் அக்டர் எஸ்.பி போகர்கர்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்