கிரிக்கெட்

கிரிக்கெட்டை பற்றி தெரியாதவர்கள் கிரிக்கெட் அமைப்பை நடத்துகிறார்கள் - அசாருதீன் குற்றச்சாட்டு

கிரிக்கெட்டை பற்றி தெரியாதவர்கள் கிரிக்கெட் அமைப்பை நடத்துகிறார்கள் அவமானபடுத்தப்பட்டதாக அசாருதீன் குற்றசாட்டு கூறி உள்ளார். #Azharuddin #cricketnews

தினத்தந்தி

ஐதராபாத்

ஐதராபாத் கிரிக்கெட் சங்க சிறப்பு குழு கூட்டத்தில் தன்னை கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஐதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐதராபாத் கிரிக்கெட் சங்க சிறப்பு குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் வந்தார். ஆனால் அந்த கூட்டத்திற்கு அவரை அனுமதிக்காமல் அவரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியே நிற்க வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் கூட்டம் நடந்த இடத்திற்குள் அனுமதிக்கபட்டு உள்ளார். கூட்டம் முடிந்ததும் ஐதராபாத் கிர்க்கெட் சங்க நடவடிக்கைகள் குறித்து அசாருதீன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். கிரிக்கெட் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பினார். கிரிக்கெட் சங்கம் கலைக்கப்பட வேண்டும் என்று கோரினார்.

இது குறித்து அசாருதீன் கூறியதாவது:-

போட்டிகளில் விளையாடுவதற்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்று வீரர்கள் புலம்புகிறார்கள். ஆசை மற்றும் கற்பனைகளால் நீங்கள் ஒரு நிறுவனத்தை இயக்க முடியாது. இது சிலருக்கான வீடு அல்ல. இந்த அமைப்பு இது 1932 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் ஒரு அமைப்பு ஆகும். வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களை அதிகரிக்க,எனது உறுப்பினர் சேர்க்கைக்கு மற்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஊழல் அதிகாரிகளின் காரணமாக வாய்ப்புகளை மறுக்கின்றனர்.

"அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு என்னை வெளியே காத்திருக்க வைத்தார்கள். இது மிகவும் சங்கடமாக இருந்தது. நான் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு வீரர் மற்றும் பத்து ஆண்டுகளாக இந்திய அணியின் கேப்டனாக இருந்து உள்ளேன். கிரிக்கெட்டை பற்றி தெரியாத இவர்கள் கிரிக்கெட் அமைப்பை நடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் வழ்க்கையில் ஒருமுறை கூட பேட்டையோ பந்தையோ தொட்டது இல்லை. எனது உறுப்பினர் சேர்க்கைக்கு மற்ற உறுப்பினர்கள் உதவி செய்தால் நான் உங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பேன் என உறுதி கூறுகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

#Azharuddin | #cricketnews | #BoardofControlforCricketinIndia

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை