Image Courtesy : Twitter IPL  
கிரிக்கெட்

பஞ்சாப்புக்கு எதிரான போட்டி : டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு

ஐதராபாத் அணியின் தமிழக வீரர் நடராஜன் இந்த போட்டியில் விளையாடவில்லை.

தினத்தந்தி

மும்பை,

மும்பை, ஐபிஎல் 15-வது சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே குஜராத், லக்னோ, ராஜஸ்தான் , பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுவிட்டன. இந்த நிலையில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்கும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் தாயகம் திரும்பியுள்ளதால் இன்று அணியின் கேப்டனாக புவனேஸ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் பேட்டிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் 3 மாற்றங்களும், ஐதராபாத் அணியில் 2 மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

ஐதராபாத் அணியின் தமிழக வீரர் நடராஜன் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதில் சுசித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்