கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தோவு

11வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தோவு செய்துள்ளது. #IPL2018

தினத்தந்தி

ஜெய்ப்பூர்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங்ஸ்டேடியத்தில் 28வது லீக் ஆட்டம் நடைப்பெறுகிறது. இந்த பகல்-இரவு ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி இதுவரை 6 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. மேலும், ஐதராபாத் அணி 7 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வி கண்டு இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க ராஜஸ்தான் அணி முயற்சிக்கும். இரு அணியிலும் சமபலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என கருதப்படுகிறது

இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்தப்போட்டியில் , டாஸ் வென்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்