சென்னை,
ஜெர்மன் இன்ப்ளூயன்சர் லிஸ்லாஸ் (Lizzalazz), விராட் கோலி தனது புகைப்படத்தை 'லைக்' செய்ததாக எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் காலையில் எழுந்தபோது எல்லா இடங்களிலும் இந்த செய்திதான் இருந்தது. அவர் எப்போது லைக் செய்தார் என்பது கூட எனக்குத் தெரியாது, செய்திகள் மூலமாகவே நான் அதைத் தெரிந்துகொண்டேன். பலர் அந்த செய்திகளின் லிங்க்குகளை எனக்கு இன்ஸ்டாகிராம் டிஎம் (DM)-ல் அனுப்பி வைத்தனர்.
உண்மையைச் சொல்லப்போனால், அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். அவர் லைக் செய்ததில் எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால் அது ஏன் இவ்வளவு பெரிய செய்தியானது என்று தெரியவில்லை. இதெல்லாம் கோலியின் நோக்கமாக இருந்திருக்காது" என்றார்.
மேலும், கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்தபோதுதான் விராட் கோலி பற்றி தனக்குத் தெரியவந்ததாகவும், அப்போது ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கத் தொடங்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ரசிகையாக மாறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.