Image Courtesy: AFP  
கிரிக்கெட்

அணியில் உள்ள வீரர்களுக்கு நான் தெளிவான திட்டங்களை வழங்கி இருந்தேன் - கேப்டன் ரோகித் சர்மா

நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

தினத்தந்தி

இந்தூர்,

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 68 ரன், ஷிவம் துபே 63 ரன் எடுத்தனர்.

இந்நிலையில், இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது,

உண்மையிலேயே இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.நமது அணியில் உள்ள வீரர்களுக்கு நான் தெளிவான திட்டங்களை வழங்கி இருந்தேன். ஒவ்வொரு வீரரும் செய்ய வேண்டிய பங்கு குறித்து சிறப்பாக தெரியும்.

அந்த வகையில் அனைவருமே போட்டியை சிறப்பாக முடித்துக் கொடுத்ததில் பெருமையாக இருக்கிறது. கடந்த சில போட்டிகளாகவே நாங்கள் அனைத்து துறைகளிலும் நன்றாக செயல்பட்டு வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 என இரண்டிலுமே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஷிவம் துபே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பவர் புல்லான வீரர். அவரும் தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார். இந்த இரண்டு போட்டிகளிலுமே அவர் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்