புது டெல்லி,
விளையாட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது .அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி வாழ்த்தினார்.
அதன்படி புதுடெல்லியில் நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஷிகார் தவானுக்கு, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இந்நிலையில் அர்ஜூனா விருதினை பெற்ற தவான் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்;
இந்தியாவை பெருமைப்படுத்த தொடர்ந்து உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.