கிரிக்கெட்

‘இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிப்பேன்’ - ரவிசாஸ்திரி

இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிப்பேன் என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்டார். இதையொட்டி அவர் கிரிக்கெட் வாரியத்தின் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

என்னை பயிற்சியாளராக தேர்வு செய்த கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டிக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியின் கட்டமைப்பில் நானும் அங்கம் வகிப்பது பெருமையும், கவுரவமும் அளிக்கிறது. நமது அணி தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணியின் செயல்பாட்டை பார்த்தால், மிக அற்புதமாக இருப்பது தெரியும். அதே போல் தொடர்ந்து எழுச்சி பெற வேண்டும்.

அடுத்த 2 ஆண்டுக்குள் அணியில் சுமுகமான மாற்றங்கள் நடப்பதை நீங்கள் பார்க்கலாம். ஏனெனில் நிறைய இளம் வீரர்கள் வருவார்கள். குறிப்பாக டெஸ்ட் போட்டிக்கு அவர்களை தயார்படுத்த வேண்டும். பந்து வீச்சு குழுவுக்கு இன்னும் 3 அல்லது 4 வேகப்பந்து வீச்சாளர்களை அடையாளம் காண்பது அவசியமாகும். இது சவாலான பணியாகும். எனது 2 ஆண்டு கால ஒப்பந்தம் முடிவடையும் போது அணியை மகிழ்ச்சியான, நல்ல நிலையில் விட்டு செல்வேன். இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்