கிரிக்கெட்

அஸ்வினுக்கு ஐ.சி.சி. விருது..?

இந்த ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது பட்டியலில் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.

தினத்தந்தி

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் 13 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. இதில் இந்த ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது பட்டியலில் 4 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

2021-ம் ஆண்டில் 8 டெஸ்டில் விளையாடி 52 விக்கெட்டுகளும், ஒரு சதம் உள்பட 337 ரன்களும் எடுத்துள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

மேலும், ஒரே ஆண்டில் 6 சதம் உள்பட 1,708 ரன்கள் குவித்து அசத்திய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்து கேப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன், இலங்கை கேப்டன் கருணாரத்னே ஆகியோரும் விருதுக்கான போட்டியில் இருப்பதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

இதற்கான கமிட்டியினர் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில், இவர்களில் இருந்து ஒருவர் சிறந்த டெஸ்ட் வீரராக தேர்வு செய்யப்படுவார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்