பிர்மிங்காம்,
இங்கிலாந்து நாட்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி ஆடியது. மழை குறுக்கிட்டதனை அடுத்து நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 319 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணி விளையாடியது.
அந்த அணி 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்த நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் அலி (12) மற்றும் ஷேசாத் (7) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மீண்டும் மழையால் பாதிப்படைந்தது.
அதன்பின்னர் ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதன்படி, 41 ஓவர்களில் 289 ரன்கள் வெற்றி இலக்காக பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அந்த அணியில் ஷேசாத் (12) மற்றும் அஸாம் (8) ரன்களில் ஆட்டமிழந்தனர். அலி (40) மற்றும் ஹபீஸ் (0) ரன்களுடன் ஆடி வருகின்றனர். அந்த அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆடி வருகிறது.