கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிராக விளையாட மறுப்பு - பாகிஸ்தானை தடை செய்ய ஐ.சி.சி ஆலோசனை?

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.

சென்னை,

வங்கதேசத்திற்கு ஆதரவாக டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பதாக எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எச்சரித்துள்ளது.

அவ்வாறு செய்யாவிட்டால் பாகிஸ்தானை சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மொத்தமாக தடை விதிக்கவும் பாகிஸ்தானின் அணியின் நிதி ஆதாரங்களை முடக்கவும் ஐ.சி.சி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 'சி' பிரிவில் வங்காளதேச அணி இடம் பிடித்து இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்த வங்கதேச அணி, உலகக்கோப்பைத் தொடரிலிருந்து நீக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக . மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வங்கதேசத்திற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது.

இலங்கையில் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்தது. இந்நிலையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.

இலங்கையில் வரும் 15-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் அமளி - பிற்பகல் 3 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை

மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று அமெரிக்கா பயணம்

பாலியல் தொல்லை கொடுத்த நண்பரை காதலனுடன் சேர்ந்து கத்தியால் குத்திக்கொன்ற பெண் உள்பட 3 பேர் கைது

கடந்த ஜனவரி மாதம் மின்சார இருசக்கர வாகனங்கள் பதிவு உயர்வு