image courtesy;twitter/@BCCI 
கிரிக்கெட்

ஐசிசி ஒருநாள் தரவரிசை; இந்திய அணி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தினத்தந்தி

துபாய்,

10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடக்கிறது. இந்த தொடருக்கு முன்பாக ஒருநாள் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தை பிடிக்க ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே போட்டி நிலவுகிறது.

இதனிடையே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் தொடருகிறது. ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணி 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

அதேவேளையில், ஆசிய கோப்பையில் தொடர் வெற்றிகளை பெற்றுவரும் இந்திய அணி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெற உள்ள வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, அதேசமயம் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி அடைந்தால் இந்திய அணி நம்பர் 1 இடத்தை பிடித்துவிடும். மாறாக இவ்விரண்டு அணிகளும் தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் முதலிடத்திற்கு முன்னேறும். 

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி