Image Courtesy: @ICC 
கிரிக்கெட்

ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது - யுஏஇ வீரர் பெயர் பரிந்துரை...!

ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு யுஏஇ வீரர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன், வங்கதேசத்தின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் மற்றும் யுஏஇ-யை சேர்ந்த ஆசிப் கான் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இந்த மூவரில் அதிக வாக்குகள் பெறுபவருக்கு ஐசிசி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்படும். அதே போல் ஐசிசி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு சிபோனா ஜிம்மி (பப்புவா நியூ கினியா) , ஹென்றிட் இஷிம்வே (ருவாண்டா), ரவினா ஓ (பப்புவா நியூ கினியா) ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை