கிரிக்கெட்

ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் ஸ்மிருதி மந்தனா

பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 791 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

தினத்தந்தி

துபாய்,

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டது.இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 791 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி தொடர்ச்சியாக சதங்களை விளாசினார். இதனால் ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் நீடிக்கிறார்

இந்த தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தின் நாட் சீவர்-புருன்ட் 731 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 713 புள்ளியுடன் 3வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் 4வது இடத்திலும் உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு