புதுடெல்லி,
ஐ.சி.சி. இருபது ஓவர் பேட்டிங் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான செபாலி வர்மா 759 புள்ளிகளுடன் அதனை தக்க வைத்து கொண்டார்.
அதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி (744 புள்ளிகள்) மற்றும் 3வது இடத்தில் இந்திய இருபது ஓவர் துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தனா (716 புள்ளிகள்) உள்ளனர்.
இந்த பட்டியலில் மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனையான மெக் லேனிங் (709 புள்ளிகள்) 4வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து நாட்டின் சோபீ டெவினி (689 புள்ளிகள்) 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.