Image Tweeted By @mandhana_smriti  
கிரிக்கெட்

பெண்கள் டி20 பேட்டிங் தரவரிசை: ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

துபாய்,

பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (730 ரேட்டிங் புள்ளி) முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனியை (743 ரேட்டிங் புள்ளி) விட மந்தனா 13 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார். 3-வது இடத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் உள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா 7-வது இடத்திலும், ஜெமிமா 8-வது இடத்திலும் உள்ளனர்.

அதே போல் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தீப்தி சர்மா முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சக இந்திய வீராங்கனை ரேணுகா சிங் உள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்