கிரிக்கெட்

ஐ.சி.சி. டி20 தரவரிசை: ஆல்-ரவுண்டர்களில் 2 வீரர்கள் முதலிடம்...யாரெல்லாம் தெரியுமா?

டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

துபாய்,

அயர்லாந்து - பாகிஸ்தான் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஜிம்பாப்வே - வங்காளதேசம் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவடைந்துள்ளது.

இதில் வீரர்களின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

ஆனால் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் நம்பர் 1 இருந்த ஷகிப் அல் ஹசன் 3 புள்ளிகள் சரிந்த நிலையில், 2-வது இடத்தில் இருந்த வனிந்து ஹசரங்காவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா 2 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்