கிரிக்கெட்

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியல்; 5வது இடத்தில் நீடிக்கும் விராட் கோலி

இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் கோலி 5வது இடத்தில் உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐ.சி.சி. தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட பல்வேறு நாட்டு வீரர்களின் தரவரிசை விவரம் வெளிவந்து உள்ளது.

இந்த பட்டியலில், முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் கனே வில்லியம்சன் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5வது இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே 11வது இடம் வகிக்கிறார்.

இதேபோன்று வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 3 இடங்கள் முன்னேறி 27வது இடத்திற்கு வந்துள்ளார். அந்நாட்டின் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் கேப்டன் மொமினுல் ஹேக் முறையே 21 மற்றும் 30 ஆகிய இடங்களில் உள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் 15 இடங்கள் முன்னேறி 20வது இடத்தில் உள்ளார். பேட்ஸ்மேன் தரவரிசையில் இடதுகை பேட்ஸ்மேனான பவாத் ஆலம் 31 இடங்கள் முன்னேறி 47வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஜிம்பாப்வே அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்சிங் முஜாரபானி 26 இடங்கள் முன்னேறி 55வது இடத்திற்கு வந்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு