கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசை; ரோகித் சர்மா 5 ஆம் இடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மா 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக ரோகித் சர்மா 5 ஆம் இடம் பிடித்துள்ளார். ரோகித் சர்மா இதுவரை 42 டெஸ்டுகளில் விளையாடி 2,909 ரன்கள் எடுத்துள்ளார். 7 சதங்களும் 14 அரை சதங்களும் எடுத்துள்ளார்.

2019 அக்டோபரில் 54-வது இடத்தில் இருந்த ரோகித் சர்மா, தற்போது 5 இடத்தை எட்டிப் பிடித்துள்ளார். இந்தப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 6-ம் இடத்தில் உள்ளார். டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் ஜோ ரூட்டும் அடுத்த மூன்று இடங்களில் கேன் வில்லியம்சன், ஸ்மித், மார்னஸ் ஆகியோரும் உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்