ஆண்டிகுவா,
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. இந்த நிலையில் நான்காவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்து வ்ருகிறது.சற்று முன் வரை, அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 12 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
இப்போட்டிக்கன இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங், யாஷ் துல்(கேப்டன்), ராஜ் பாவா, கவுஷல் தம்பே, தினேஷ் பனா, அனீஷ்வர் கவுதம், விக்கி ஓஸ்ட்வால், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், வாசு வாட்ஸ் மற்றும் ரவிக்குமார்.
வங்காளதேச அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
மஹ்பிஜுல் இஸ்லாம், இப்தாகர் ஹொசைன் இப்தி, பிராந்திக் நவ்ரோஸ் நபில், ஐச் மொல்லா, எம்.டி. ஃபஹீம், அரிஃபுல் இஸ்லாம், எஸ்.எம். மெஹெரோப், ரகிபுல் ஹசன்(கேப்டன்), அஷிகுர் ஜமான், டான்சிம் ஹசன் சாகிப் மற்றும் ரிப்பன் மொண்டோல்.