கிரிக்கெட்

பெண்கள் கிரிக்கெட்; ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா! முன்னேற்றம் கண்ட இந்திய வீராங்கனைகள்!

பெண்கள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

தினத்தந்தி

துபாய்,

பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

அதன்படி வெளியாகியுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 5வது இடத்துக்கு முன்னேறினார். அவர் 2 இடங்கள் முன்னேறி உள்ளார். கேப்டன் மிதாலி ராஜ் 2வது இடத்தில் நீடிக்கிறார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி முதல் இடத்தில் உள்ளார்.

அதைபோல, ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஜூலன் கோஸ்வாமி 2வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோனசென் முதலிடத்தில் உள்ளார்.

ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் எல்லைஸ் பெர்ரி முதல் இடத்தில் உள்ளார். இந்தியாவின் தீப்தி சர்மா 4வது இடத்திலும், ஜூலன் கோஸ்வாமி 10வது இடத்திலும் உள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை