கிரிக்கெட்

ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; தோல்வியை தவிர்க்க போராடி வரும் இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 261 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

ஹாமில்டன்,

ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி பங்கேற்கும் 8வது ஆட்டம் ஹாமில்டன் நகரில் பகல்-இரவு போட்டியாக நடைபெறுகிறது. இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில், இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு பதிலாக யாஸ்திகா பாட்டியா அணியில் சேர்க்கப்பட்டு அவர் விளையாடுகிறார்.

நியூசிலாந்து அணி தொடக்கத்தில் சற்று சரிவை சந்தித்தது. தொடக்க ஆட்ட வீராங்கனையான சுசீ பேட்ஸ் (5) ரன்களில் வெளியேறினார். மற்றொரு வீராங்கனையான சோபி (35 ரன்கள்) ஆட்டமிழந்து உள்ளார். எனினும், அமெலியா கெர் மற்றும் எமி சாட்டர்வெய்ட் அரை சதம் விளாசினர். அவர்கள் முறையே 50 மற்றும் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கிரீன் (27), கேத்தி (41), ஹெய்லி (1), லீ தகுகு (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து உள்ளனர். ஜெஸ் கெர் ரன் எதுவும் எடுக்கவில்லை. மெக்கே (13), ஹன்னா (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்களை எடுத்து உள்ளது. இந்தியாவுக்கு 261 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை