Image Courtesy : AFP  
கிரிக்கெட்

ரிஷாப் பண்ட் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் சாதனை புத்தகத்தில் அவர் பெயர் இடம் பெறும் : சேவாக் கருத்து

ரிஷப் பண்ட் 100க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் ஆடினார் என்றால் சாதனை புத்தகங்களில் அவரது பெயர் பொறிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் .

தினத்தந்தி

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக மிகசிறப்பாக விளையாடிவருகிறார் .கடினமான சமயங்களில் தனது அதிரடி ஆட்டத்தால் ரன்கள் குவிக்கும் பண்ட் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார் .மேலும் இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட் 1920 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் டெஸ்ட் சதங்கள் அடித்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்த்துள்ளார் .

இந்நிலையில் ரிஷாப் பண்ட் ககுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியதாவது ;

ரிஷப் பண்ட் 100க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் ஆடினார் என்றால் சாதனை புத்தகங்களில் அவரது பெயர் பொறிக்கப்படும் . 11 வீரர்கள்தான் இந்தியாவில் இதை சாதித்துள்ளார், அவர்களை பெயர்களை நாம் நினைவு கூற முடியும்.

விராட் கோலி ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் தெரியுமா? ஏனெனில் 100-150 டெஸ்ட்கள், ஏன் 200 டெஸ்ட்களை ஆடினார் என்றால் சாதனை புத்தகத்தில் அவர் பெயரை யாரும் அழிக்க முடியாது,என்று தெரிவித்துள்ளார் .

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு