கிரிக்கெட்

இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிக்கு வராவிட்டால் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிக்கு வராவிட்டால் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது.

தினத்தந்தி

லாகூர்,

பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்த போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் வங்காளதேசத்துக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் சமீப காலமாக பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடந்து வருவதால் இந்த போட்டியை தங்கள் நாட்டில் நடத்துவது என்பதில் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது. ஆனால் இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது சந்தேகம் தான். ஏனெனில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்றதில்லை.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம்கான் அளித்த ஒரு பேட்டியில், ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை எங்களுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வழங்கியுள்ளது. இதை நடத்தும் வாய்ப்பை நாங்கள் இன்னொரு நாட்டுக்கு வழங்க முடியாது. அதற்குரிய அதிகாரமும் எங்களுக்கு இல்லை. எங்கள் நாட்டில் இரண்டு இடங்களில் இந்த போட்டியை நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஆசிய கோப்பை போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வராவிட்டால் அடுத்த ஆண்டு (2021) இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க நாங்கள் மறுப்பு தெரிவிப்போம் என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்