கிரிக்கெட்

ஐ.பி.எல் ஏலத்தில் இந்த 4 இந்திய வீரர்களும் கலந்து கொண்டால் ரூ. 100 கோடிக்கு மேல் செல்வார்கள் - உத்தப்பா

ஐ.பி.எல். ஏலத்தில் இந்த 4 இந்திய வீரர்களும் கலந்துகொண்டால் ரூ.100 கோடிக்கு மேல் ஏலம் போவார்கள் என ராபின் உத்தப்பா கணித்துள்ளார்.

மும்பை,

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற்றது. அதில் உச்சபட்சமாக இதுவரை ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக மிட்செல் ஸ்டார்க் 24 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார். அவருக்கு அடுத்து பேட் கம்மின்ஸ் 20 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டார்.

இந்நிலையில் ஐ.பி.எல். ஏலத்தில் இந்திய வீரர்கள் 4 பேர் கலந்து கொண்டு இருந்தால் 100 கோடிக்கு மேல் சென்றிருப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறிய அந்த நான்கு வீரர்கள் விவரம் பின்வருமாறு :

1. விராட் கோலி

2. ரோகித் சர்மா

3.சூர்யகுமார் யாதவ்

4.பும்ரா ஆவர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு