கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட்; சதம் விளாசினார் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்

சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் 200 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

ராவல்பிண்டி,

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் , 3 ஒருநாள் தொடர் மற்றும் ஒரு 20 போட்டி தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக அப்துல்லா மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி இந்த ஜோடி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சிதறடித்தது.

அப்துல்லா 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் இமாம் உல் ஹக் உடன் அசார் அலி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் 200

பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தற்போது வரை பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்