கிரிக்கெட்

ஓய்வு நேரத்தில் குதிரையுடன் ஓட்ட பந்தயத்தில் தோனி; வீடியோ வெளியிட்ட மனைவி சாக்ஷி

இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி ஓய்வு நேரத்தில் குதிரையுடன் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட வீடியோ வெளிவந்து உள்ளது.

தினத்தந்தி

ராஞ்சி,

ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

இதனால் தோனியின் ரசிகர்கள் அவரை காண முடியாமல் உள்ளனர். இந்த ஆண்டு செப்டம்பரில் டி20 லீக்கின் மீதமுள்ள போட்டிகள் நடைபெறும் என பி.சி.சி.ஐ. தெரிவித்தது.

ராஞ்சி நகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வரும் தோனி, அந்த வீட்டில் குதிரை ஒன்றையும் வளர்த்து வருகிறார். கடந்த மாதம், அந்த குதிரைக்கு மசாஜ் செய்ததுடன் அதனுடன் விளையாடினார். இந்த வீடியோவை அவரது மனைவி சாக்ஷி வெளியிட்டார்.

இந்த நிலையில், மற்றொரு வீடியோவை தோனியின் மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், குதிரையுடன் தோனி ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால், கிரிக்கெட் போட்டியில் தோனியை காண முடியாத ரசிகர்கள் குதிரையுடனான ஓட்ட பந்தயத்தில் அவரை கண்டு ரசித்து வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை