கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி 96 ரன்னில் சுருண்டது

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், இமாச்சலபிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 96 ரன்னில் சுருண்டது.

திண்டுக்கல்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-இமாச்சலபிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) திண்டுக்கல் நத்தத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இமாச்சலபிரதேசம் 158 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 2-வது நாளான நேற்று தனது முதல் இன்னிங்சை விளையாடிய தமிழக அணி சொந்த ஊரில், இமாச்சலபிரதேச வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 39 ஓவர்களில் வெறும் 96 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஆர்.அஸ்வின் 24 ரன்னும், ஜே.கவுசிக் 21 ரன்னும் எடுத்தனர். இமாச்சலபிரதேச அணி தரப்பில் வைபவ் அரோரா 3 விக்கெட்டும், மயங்க் தாகர், ரிஷி தவான், ஆகாஷ் வஷிஸ்ட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

அடுத்து 62 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இமாச்சலபிரதேச அணி ஆட்ட நேர முடிவில் 46 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. தமிழக பவுலர்கள் டி.நடராஜன், ஆர்.அஸ்வின், சாய்கிஷோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். நேற்று ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு