சென்னை,
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் 4 வாரங்களில் இந்த போட்டியை டெலிவிஷன் மற்றும் ஹாட்ஸ்டார் வழியாக 41 கோடியே 10 லட்சம் பேர் கண்டுகளித்து இருப்பதாக ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியை பார்க்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 52 சதவீதம் ஆகும். கடந்த சீசனுடன் ஒப்பிடும் போது பெண் பார்வையாளர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.