கிரிக்கெட்

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுருக்கு அழைப்பு

திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலருக்கு ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திரைப் பிரபலங்கள் அக்ஷய் குமார், கங்கனா ரனாவத், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ரன்பீர் கபூர், ஆலியா பட், ஜேக்கி ஷெராப், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, அஸ்வின், விராட் கோலி உள்ளிட்ட பலருக்கு ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜுக்கு ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழை தனது தாயார் பெற்றுக் கொண்டதாக மிதாலி ராஜ் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து