கிரிக்கெட்

தென்னாப்ரிக்கா செல்லும் இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டன்கள்: மனிஷ் பாண்டே, கருண் நாயர்

தென்னாப்ரிக்கா செல்லும் இந்தியா ’ஏ’ கிரிக்கெட் அணியின் கேப்டன்களாக மனிஷ் பாண்டே மற்றும் கருண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஏ அணிகள் பங்குபெரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் தென்னாப்ரிக்கவில் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட அணியின் கேப்டனாக மனிஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

அணியின் முழு விவரம்:

மந்திப் சிங், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, திபக் ஹூடா, கருண் நாயர், குருனல் பாண்டியா, ரிஷாப் பாண்ட், விஜய் சங்கர், அக்சார் பட்டேல், யுஸ்வேந்திர சஹால், ஜெயந்த் யாதவ், பஷில் தம்பி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், சித்தார்த் கவுல்.

ஒருநாள் தொடரை தொடர்ந்து இந்திய அணி தென்னாப்ரிக்கா ஏ அணியுடன் இரண்டு 4 நாள் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணியின் கேப்டனாக கருண் நாயர் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அணியின் முழு விவரம்:

பிகே பஞ்சால், அபினவ் முகுந்த், ஸ்ரேயாஸ் ஐயர், அன்கித் பாவ்னே, கருண் நாயர், சுதிப் சட்டர்ஜி, இஷன் கிஷன், ஹனுமா விஹாரி, ஜெயந்த் யாதவ், சபாஸ் நதிம், நவ்திப் ஷைனி, முகமது சிராஜ், ஷர்துல் தாகுர், அனிகித் சவுத்திரி, அன்கித் ராஜ்புட்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து