Image Courtesy: AFP  
கிரிக்கெட்

இந்தியா-ஆஸ்திரேலியா டி20 தொடர்: முதல் போட்டிக்கான இந்தியாவின் ஆடும் லெவன் இது தான் - வாசிம் ஜாபர்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டிக்கான இந்தியாவின் ஆடும் லெவனை வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ளார்.

மொகாலி,

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த தொடரில் தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறுகிறது.

முன்னதாக உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே இடம் பிடித்துள்ளதால் 11 பேர் அணியில் விளையாடப் போவது யார் என்ற மிகப் பெரிய விவாதம் இந்திய வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முதல் டி20 போட்டியில் களமிறங்கும் தன்னுடைய சிறந்த 11 பேர் இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக்கை முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ள அவர் ரிஷப் பண்ட்டை கழற்றி விட்டுள்ளார்.

வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ள இந்திய அணி:-

கேஎல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, சஹால் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்