கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங் தேர்வு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது

ஜோகனர்ஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பார்ல் நகரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே பார்ல் நகரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இப்போட்டிக்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இந்தியா நெருக்கடியான சூழலில் களம் இறங்குகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்:

இந்தியா: லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் அய்யர், அஸ்வின், ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர்குமார், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

தென் ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ஜேன்மன் மலான், மார்க்ராம், பவுமா (கேப்டன்), வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பெலக்வாயோ, கேஷவ் மகராஜ், ஷம்சி, லுங்கி இங்கிடி, சிஷண்டா மஹலா.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்