கிரிக்கெட்

இந்தியா, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்: 3-வது டி-20 ஆட்டத்திற்கான தேதி மாற்றம்

இந்தியா, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் போட்டியின் 3-வது டி-20 ஆட்டம் ஜூலை 14-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லண்டன்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் ஆட்டம், 3 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 3 டி-20 ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் ஆட்டம் ஜூன் 16 ஆம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஜூன் 27-ந் தேதியும், டி20 தொடர் ஜூலை 9-ந் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் டி-20 போட்டியின் 3-வது ஆட்டம் ஜூலை 15 ஆம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒளிபரப்பு காரணங்களுக்காக, 3-வது ஆட்டம் ஜூலை 15 ஆம் தேதிக்குப் பதில் ஜூலை 14 ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது