மும்பை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் போட்டி டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கவேண்டிய போட்டி மைதானத்தில் நிலவி வந்த ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கியுள்ளது.
அதன்படி, இப்போட்டிக்கான டாஸ் 11.30 மணியளவில் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இரு அணி வீரர்கள் விவரம்:-
இந்தியா: மயங்க் அகர்வால், சுக்மன் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயஸ் அய்யர், விரிதிமன் சஹா, அஸ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், முகமது சிராஜ்.
நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), வில் யங்க், டிரைல் மிச்சில், ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோலஸ், டாம் பிளண்டெல், ரஷின் ரவிந்திரா, கைல் ஜெமிசன், டிம் சவுதி, வில்லியம் சம்ரிவெல், அஜாஸ் படேல்.