புதுடெல்லி,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 20 அணி கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் 'சூப்பர்' சுற்றுக்கு முன்னேறின. 'சூப்பர்' சுற்றுக்கு வந்துள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த போட்டி தொடரில் தற்போது 'சூப்பர்8' சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று 2 ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இரவு தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி தொடர்பாக பேசிய இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியதாவது,
இந்திய அணியும் பேட்டிங்கில் மிக வலிமையுடன் உள்ளது. அதே போல் தென் ஆப்பிரிக்கா அணியும் பேட்டிங்கில் பலமாக உள்ளது. இதனால் இந்த போட்டி சிறந்ததாக இருக்கும். என தெரிவித்தார்.