வெல்லிங்டன்,
இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இந்த சுற்றுப்பயணத்தில் 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்திய அணி தனது பயணத்தை அக்டோபர் மாத இறுதியில் டி20 தொடருடன் தொடங்குகிறது. அதன்பின் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இறுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 19 முதல் 23-ம் தேதி வரைபேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 27 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
உலக கிரிக்கெட்டின் வலுவான அணிகளாக திகழும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மீண்டும் நேருக்கு நேர் மோதவுள்ளதால், இந்த சுற்றுப்பயணம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 ஆண்டுகளுக்கு பின் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது . கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு ஆஸி அணியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது இந்திய அணி. அத்தொடரை 3-2 என ஆஸ்திரேலியா கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.