கிரிக்கெட்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா முதலில் பேட்டிங்

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

பெர்த்,

பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு 17 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் சல்மா கதுன் தலைமையிலான வங்காளதேச அணியை பெர்த்தில் இன்று எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு