கோப்புப்படம் 
கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது

தினத்தந்தி

ஆமதாபாத்,

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 4-ம் தேதி தெடங்குகிறது. அடுத்து நடைபெற உள்ள 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது அல்லது டிரா செய்வதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குத் தகுதி பெறும். கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் சென்னை, ஆமதாபாத் மைதானங்கள் அனைத்தும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகத் தன்னை விடுவிக்குமாறு பும்ரா கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

4-வது டெஸ்டில் இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் அல்லது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து