துபாய்,
இந்தியா -தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இந்த போட்டியின் போது ஜோகன்னஸ்பர்க் மைதானம் மிகவும் மோசமாக இருந்ததாக புகார் எழுந்தது. பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆனதை காண முடிந்தது. எதிர்பாராத வகையில், பந்து பவுன்ஸ் ஆனதில் இரு அணி வீரர்களும் தடுமாறினர்.
இந்த நிலையில், ஜோகன்னஸ்பர்க் வாண்டெரர் மைதானத்தில் உள்ளது மோசமான பிட்ச் என்று ஐசிசி அறிவித்துள்ளது. மோசமான பிட்ச்களுக்கு அளிக்கப்படும் நிலைகளில் 3 புள்ளிகள் (டிமெரிட்ஸ்) ஐசிசி வழங்கியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு இந்த பிட்ச் கண்காணிக்கப்படும் எனவும் இந்த காலகட்டத்தில் 5 புள்ளிகள் என்ற நிலையை எட்டினால், 12 மாதங்களுக்கு சர்வதேச போட்டிகள் நடத்த ஜோகன்னஸ்பர்க் மைதானத்திற்கு தடை விதிக்கப்படும் என்று ஐசிசி எச்சரித்துள்ளது. #icc | #indvsSA