கொழும்பு,
சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி மண்ணைக்கவ்வியுள்ளது. இந்த நிலையில், தேவையேற்பட்டோல் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்க முடியும் என்று அந்நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி தயாசிறி ஜெயசகேரகா கூறியுள்ளார்.
இது குறித்து ஜெயசேகரா கூறுகையில், இலங்கையின் கிரிக்கெட் சூழ்நிலைகளை மீட்டெடுக்க எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும். அதன் நன்மைக்காக, தேவையேற்பட்டால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்கவும் தயங்க மாட்டேன் என்றார்.