கொல்கத்தா,
இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதத்தில் இலங்கைக்கு சென்று 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று தெரிவித்தார். விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் 2-ம் தர இந்திய அணியே இலங்கைக்கு செல்கிறது. அங்கு ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்திய அணி திட்டமிட்டுள்ளது.