கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி பேட்டிங்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

லீட்ஸ்,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் கடைசி நாளில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் மழை புகுந்து கெடுத்து விட்டது. அந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை புரட்டி எடுத்ததோடு தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதன்படி இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தொடங்க உள்ளது.

முன்னதாக லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் இந்திய அணி இதுவரை 6 டெஸ்டில் விளையாடி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது. இங்கு கடைசி இரு டெஸ்டுகளில் இந்தியா வெற்றி பெற்றிருப்பது (1986 மற்றும் 2002-ம் ஆண்டு) கூடுதல் நம்பிக்கையை தருகிறது. 2002-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 628 ரன்கள் குவித்தது சிறப்பம்சமாகும்.

இங்கிலாந்து அணி இங்கு கடைசியாக விளையாடிய 10 டெஸ்டுகளில் 4-ல் வெற்றி, 5-ல் தோல்வி, ஒன்றில் டிரா கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:-

இந்தியா:

லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), புஜாரா, ரஹானே, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து:

ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், ஜோ ரூட் (கேப்டன்), டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் கர்ரன், ஆலி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு