கிரிக்கெட்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா பெண்கள் தொடர்: டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் அட்டவணை வெளியீடு

இந்திய அணி ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

சென்னை,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தாண்டு டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் (ODI) போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது.

இந்த சுற்றுப்பயணம், டிசம்பர் 6-ம் தேதி ஒரு பயிற்சிப் போட்டியுடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, மூன்று ஒருநாள் போட்டிகள் டிசம்பர் 9 , 12 மற்றும் 15 -ம் தேதி போட்செப்ஸ்ட்ரூம், ப்ளூம்போன்டைன் மற்றும் கேப் டவுன் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

பின்னர் ஒரு டெஸ்ட் போட்டி டிசம்பர் 20 முதல் 23 வரை கெபெர்ஹாவில் நடைபெறுகிறது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய பெண்கள் அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.