கிரிக்கெட்

ஐபிஎல் 2026: முதல் முறையாக வெளிநாட்டு வீரர்களை மிஞ்சிய இந்திய பேட்டர்கள்

இந்திய பேட்டர்கள் வெளிநாட்டு வீரர்களை விட அதிக சராசரி ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளனர்.

மும்பை,

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக, ஒரு சீசனில் இந்திய பேட்டர்கள் வெளிநாட்டு வீரர்களை விட அதிக சராசரி ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி புதிய சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை, 2026 சீசனில் இந்திய வீரர்கள் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டத்தின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு வீரர்களை முந்திய இந்தியர்கள்

இந்த சீசனில் இந்திய பேட்டர்கள் சராசரியாக 157.10 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ரன்கள் குவித்துள்ளனர். அதே நேரத்தில் வெளிநாட்டு வீரர்களின் சராசரி ஸ்டிரைக் ரேட் 154.71 ஆக பதிவாகியுள்ளது. ஐபிஎல் தொடங்கியதிலிருந்து வெளிநாட்டு வீரர்களே அதிக அதிரடியாக விளையாடி வந்த நிலையில், இந்த முறை இந்திய வீரர்கள் அந்த ஆதிக்கத்தை முறியடித்துள்ளனர்.

ஸ்டிரைக் ரேட்டில் சூர்யவன்ஷி முதலிடம்

இந்திய வீரர்களில் இளம் அதிரடி பேட்டரான வைபவ் சூர்யவன்ஷி 237.30 என்ற அபாரமான ஸ்டிரைக் ரேட்டுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். வெளிநாட்டு வீரர்களில் நியூசிலாந்து வீரர் பின் ஆலன் 214.11 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் முன்னிலை வகித்துள்ளார்.