கோப்புப்படம் 
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய ஒரு நாள் போட்டி அணி இன்று அறிவிப்பு?

20 ஓவர் போட்டிகள் அக்டோபர் 29-ந்தேதி முதல் நவம்பர் 6-ந்தேதி வரை நடக்கிறது.

தினத்தந்தி

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெர்த்தில் வருகிற 19-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் 23-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் 25-ந் தேதியும் நடக்கிறது.

இதனை தொடர்ந்து 20 ஓவர் போட்டிகள் அக்டோபர் 29-ந்தேதி முதல் நவம்பர் 6-ந்தேதி வரை நடக்கிறது. இதன் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஓவர் மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகியோர் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு இந்த போட்டிக்கான அணிக்கு திரும்புகிறார்கள். சாம்பியன்ஸ் கோப்பை அணியில் அங்கம் வகித்த வீரர்கள் பெரும்பாலும் அப்படியே அணியில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்