image courtesy:PTI 
கிரிக்கெட்

இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு விரைவில் திருமணம்..?

மந்தனா இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரை காதலித்து வருகிறார்.

தினத்தந்தி

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மும்பையை சேர்ந்த 29 வயதாகும் இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவருக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இதற்கிடையே ஸ்மிருதி மந்தனாவும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த பலாஷ் முச்சல் இசையமைப்பாளராக உள்ளார். சில ஆல்பங்களையும் இவர் வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில் ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சல் ஜோடிக்கு நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் உள்ள ஸ்மிருதியின் சொந்த ஊரான சங்லியில் திருமண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா