கிரிக்கெட்

இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாது: முன்னாள் பாகிஸ்தான் வீரர்

சூப்பர் 8 ஆட்டங்கள் இன்று தொடங்க உள்ளன.

சென்னை,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 8 ஆட்டங்கள் இன்று தொடங்க உள்ளன.

இந்த நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாது என முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது,

குரூப் ஏ பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது. தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன்.

இந்திய அணியின் போட்டிகளை பார்க்கும் போது அனைத்து போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பி இருக்கின்றனர். சூப்பர் 8ல் அழுத்தம் அதிகமாக இருக்கும்.என தெரிவித்தார்.