கிரிக்கெட்

திருமணத்திற்காக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விடுமுறை என தகவல்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா திருமணத்திற்காக விடுமுறை எடுத்து உள்ளது தெரிய வந்துள்ளது.

தினத்தந்தி

ஆமதாபாத்,

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தெடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது அல்லது டிரா செய்வதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா (வயது 27) விடுவிக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்தது.

இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்ட அறிவிப்பில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விடுவிக்கப்பட்டு உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னை விடுவிக்குமாறு பும்ரா கேட்டு கொண்டார். அதனை தொடர்ந்து அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பும்ரா தனது திருமணத்திற்காக சில நாட்கள் விடுமுறை கேட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதுபற்றி பி.சி.சி.ஐ. வட்டாரம் வெளியிட்டுள்ள செய்தியில், பும்ரா தனக்கு திருமணம் நடைபெற உள்ளது என பி.சி.சி.ஐ.யிடம் கூறினார். அதற்கான ஏற்பாடுகளுக்கு உதவி செய்ய அவர் விடுமுறை எடுத்து உள்ளார் என தெரிவித்து உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2வது போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 3வது டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை அள்ளி சென்றனர். அதனால் அவர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்