கிரிக்கெட்

ஸ்காட்லாந்தின் டி20 உலகக் கோப்பை அணியில் மாற்றம்... அப்தஹாவுக்கு பதிலாக ஹன்னா ரெய்னி சேர்ப்பு

காயம் காரணமாக விலகிய அப்தஹாவுக்கு பதிலாக ஹன்னா ரெய்னி மாற்று வீராங்கனையாக சேர்க்கப்பட்டுள்ளார்.

மான்செஸ்டர்,

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான ஸ்காட்லாந்து அணியில், காயம் காரணமாக விலகிய அப்தஹா மக்சூத்-க்கு பதிலாக ஹன்னா ரெய்னி மாற்று வீராங்கனையாக சேர்க்கப்பட்டுள்ளார்.

அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்

ஹன்னா ரெய்னி வலது கை மிதவேகப் பந்துவீச்சாளர் ஆவார். 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், இதுவரை ஸ்காட்லாந்து அணிக்காக 41 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

முதல் உலகக் கோப்பை

சர்வதேச போட்டிகளில் அனுபவம் இருந்தாலும், உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் ஸ்காட்லாந்து அணிக்காக ஹன்னா ரெய்னி களம் காண இருப்பது இதுவே முதல் முறையாகும்.

பயிற்சிப் போட்டியில் காயம்

கடந்த 9-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சிப் போட்டியின்போது அப்தஹா மக்சூதுக்கு உள்ளங்கை எலும்பில் (மெட்டகார்பல்) முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகினார்.

இன்று அயர்லாந்துடன் முதல் ஆட்டம்

குரூப்-2 பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்காட்லாந்து அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. உலகக் கோப்பை பயணத்தை வெற்றியுடன் தொடங்கும் நோக்கில் ஸ்காட்லாந்து அணி களமிறங்குகிறது.